×
 

தமிழ்நாட்டிலேயே முதல் முறை...!! மதுரையில் கணினி மேம்பாட்டு மையம் திறப்பு... மு.க.ஸ்டாலின் அதிரடி...!

தமிழ்நாட்டில் முதல்முறையாக கணினி மேம்பாட்டு மையம் மதுரையில் அமைப்பு  - தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

மதுரை மாநகரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் மதுரை மீனாட்சி அரசு  மகளிர் கலைக் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வக மையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்

ICT அகாடமி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை மூலம் தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரையில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வக மையம் HP நிறுவனத்தோடு இணைந்து செயல்பட இருக்கிறது.  சுமார் 50 கணினிகள், சுழலும் நாற்காலிகள், நவீன கட்டமைப்பு வசதியோடு இந்த மையம் செயல்பட இருக்கிறது. 

மாணவர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு , AI தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த மையம் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்பட இருக்கிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரி வளாகப் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. 

இதையும் படிங்க: மதுரை குலுங்க...குலுங்க... நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்...!!

இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்கள் மூர்த்தி, கே.என். நேரு, உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றனர் .கணினி ஆய்வக மையத்தை ரிப்பன் வெட்டி தமிழக முதல்வர் திறந்து வைத்தார் மையத்தை  பார்வையிட்டு மாணவிகளிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். முன்னதாக கல்லூரி வளாகப் பகுதியில் மாணவிகள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கணினி மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்த பின்னர் முதல்வர் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார்.

இதையும் படிங்க: சாதி வன்மம்... அமைச்சர் மூர்த்தி உருவபொம்மை எரிக்க முயற்சி... மதுரையில் பதற்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share