தேசிய அளவில் புயலைக் கிளப்ப போகும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இன்று செய்யப்போகும் தரமான சம்பவம்..!
மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை கடந்த 2022 ஆம் ஆண்டு அமைத்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த குழுவானது 650 பக்கம் கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் அதில் இருமொழி கொள்கையை பின்பற்றப்பட வேண்டும். மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது. நீட் தேர்வு கூடாது, நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
மேலும் கல்வி என்பது மாநில பட்டியலிலே வர வேண்டும். கல்லூரி சேர்க்கையின் போது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும். சிபிஎஸ்இ ஆகியவற்றுக்கான கட்டணங்கள் என்பது சீரமைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும், ஸ்போக்கன் இங்கிலீஷ் போல ஸ்போக்கன் தமிழுக்கான முதன்மை என்பது கவனமாக செலுத்தப்பட வேண்டும், என்பது போன்ற பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில கல்வி கொள்கையை வெளியிடுகிறார்/
இதையும் படிங்க: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... தொடர்ந்து 3 நாட்கள் லீவு... அடுத்தடுத்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு...!
அது எப்போது அமுலில் வரும் என்பது குறித்து அந்த அறிவிப்பின் போது தமிழக முதலமைச்சர் வெளியிடுவார். அதை தொடர்ந்து மாநில கல்வி கொள்கையை அமைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபடும். பள்ளி கல்வித்துறை மூலமாக உயர்கல்வி துறை மூலமாக அதற்குண்டான நடவடிக்கைகள் என்பது மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... உங்க ரேஷன் கார்டும் ரத்தாகலாம்... இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!