×
 

வெளுத்து வாங்க போகுது மழை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை..!

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தாண்டு தமிழகத்தில் மே மாதமே மழை பெய்து வருகிறது. இதனால் மழை இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு எந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share