×
 

விடித்ததுமே முதலமைச்சர் குடும்பத்தையே உலுக்கிய அதிர்ச்சி.. மருமகன் சபரீசன் வீட்டில் நடந்த துயர சம்பவம்...! 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்மந்தியும், மருமகன் சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் தம்பதியின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரை இல்லத்தில் சபரீசன் மற்றும் செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக மாமனார் ஸ்டாலினுக்கு பல்வேறு வகையில் அரசியல் வியூகங்களை வகுத்துக்கொடுக்கும் நபராக சபரீசன் செயல்பட்டு வருகிறார். இவர் கட்சியில் தன்னை வெளிக்காட்டிக்கொண்டது கிடையாது என்றாலும், அதிகார மையத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். 

சபரீசனின் தந்தை வேதமூர்த்தி, இவர் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரத்தைச் சேர்ந்தவர். வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரும் கட்சி ரீதியாக தொடர்பில் இல்லை என்றாலும், திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்மந்தி என்பதால் நன்கு அறியப்பட்டவர். தற்போது 80 வயதாகும் வேதமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக நள்ளிரவு காலமான செய்தி திமுக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஒஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வேதமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது. இந்த விஷயத்தை கேள்வி பட்டதுமே அவரது மறைவுக்கு திமுக பிரமுகர் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: “ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” - நம் பாராட்டு விழா! முதல்வர் ஸ்டாலின் பதிவு..!!

இதையும் படிங்க: தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கால் வைத்ததுமே... அறிவாலயத்தில் இருந்து திமுக ம.செ.க்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share