×
 

பாஜகவின் அடக்குமுறைக்கு அடிப்பணிந்தார் எடப்பாடியார்! சரமாரியாக விளாசிய முதலமைச்சர்...

பாஜகவின் அடக்குமுறைக்கு எடப்பாடி பழனிச்சாமி அடிபணிந்து பெற்றதாக முதலமைச்சரின் ஸ்டாலின் விமர்சித் துள்ளார்.

பல்வேறு அரசியல் விவகாரங்கள், வச்சி செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நடைபெற்ற பட்ட நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: நமது கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். கட்சியின் கட்டுமானம் தான் நம்முடைய பலம் இத்தகைய நிர்வாக கட்டமைப்பு எந்த கட்சிக்கும் இல்லை. தடங்கல்கள் எப்போதும் இருக்க தான் செய்யும் உழைப்பால் அதனை வெல்லுங்கள்.

இதையும் படிங்க: மே பிறந்தும் வழி பிறக்கலையே! மாணவர் சேர்க்கையை நிறுத்த திட்டமா? லெப்ட் ரைட் வாங்கிய ராமதாஸ்!

அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும். பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கே சிக்கல் வரும். அதனால் பா.ஜ.க. கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி அடிபணிந்து விட்டார்.அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை பாஜக அடக்கி விட்டது 

 தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பா.ஜ.கவின் அடக்குமுறைக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

இதையும் படிங்க: கூட்டணி... மாற்றங்கள்... தீர்மானம்! பரபரப்பான அரசியல் சூழலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share