×
 

மதுரை மாநாட்டில் ரூ.36,660 கோடி முதலீடு! 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு!- முதல்வர் ஸ்டாலினின் மெகா திட்டம்!

தமிழ்நாட்டைப் பொருளாதார வல்லரசாக மாற்றுவதற்கான மாபெரும் இலக்கின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 'தமிழ்நாடு வளர்கிறது' எனும் தலைப்பில் ஒரு மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நாளை மதுரை மாநகரில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டை பொருளாதார வல்லரசாக மாற்றுவதற்கான மாபெரும் இலக்கின் ஒரு பகுதியாக, மதுரை மாநகரில் நாளை (டிசம்பர் 7) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 'தமிழ்நாடு வளர்கிறது' எனும் தலைப்பில் ஒரு மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நடைபெறுகிறது. இந்த மகத்தான நிகழ்வின் மூலம் தென் மண்டலத்தின் பொருளாதாரம் முற்றிலும் வரலாறு காணாத அளவில் மாறும் என்று கூறப்படுகிறது. 

மதுரையில் நாளை நடைபெறும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில், மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பெரும் முதலீடுகள் வாயிலாக, ரூ.36,660.35 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் தொடங்கப்படுவதுடன், 56,766 புதிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. அத்துடன், மதுரை மாவட்டம் மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். இது தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் நாளைப் பல்வேறு பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதில், ரூபாய் 3,065 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற அடையாளப் பணிகளைத் திறந்து வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக, மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் விதமாக ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தையும் அவர் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதையும் படிங்க: கூடங்குளம் அணு உலை ஆபத்து: பெட்ரோலை வைத்து கொள்ளை; மத்திய அரசை அட்டாக் செய்த சபாநாயகர் அப்பாவு!

இவற்றுடன், சுமார் 63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளைய மாநாட்டில் வழங்குகிறார். ஒட்டுமொத்தமாக, முதலீடுகளை ஈர்ப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மற்றும் சமூக நலன்களை உறுதி செய்வது என மூன்று முக்கியமான பணிகளை முதலமைச்சர் நாளை மதுரை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: காலி மது பாட்டில்கள் திட்டம்: "இது கூடுதல் சுமைதான்''.. 'நமது துறை' என்று செயல்பட அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share