×
 

போலீசாருக்கு SPECIAL ட்ரீட்...? சிங்கப்பெண் படை தொடக்க விழாவில் விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர விஜய் போலீசாருக்கு என முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு தொடங்கவிருக்கும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு படை, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றவுடன் தனது முதல் கையெழுத்தாக இந்த திட்டத்திற்கான அரசாணையில் கையொப்பமிட்டார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மையாகக் கொண்டு இயங்கும் இந்தப் படை, மாநிலம் முழுவதும் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. ஐ.ஜி. பதவியில் ஒரு உயர் அதிகாரி தலைமையில், ஒரு எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி.க்கள், நான்கு இன்ஸ்பெக்டர்கள், எட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20 காவலர்கள் உள்ளிட்ட 36 பதவிகளுடன் இந்தப் படை செயல்படும். 

இந்த அதிரடிப்படைக்கென புதிய வகை ஜீப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பிரத்யேக சீருடை, அதிநவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்தப் படை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும். சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு பணிகளையும் முன்னெடுக்கும். 

இதையும் படிங்க: வெறிநாய்க்கடி உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்! முதல்வர் விஜய் உத்தரவு!

இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேருரை ஆற்றுகிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பொதுவெளியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட தொடக்க விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார். அப்போது, முதல்வரின் பேருரையில் காவல்துறையினருக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாக கூடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறவினருக்குத் தொடர்பா?" - ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கில் முதல்வர் பதிலளிக்க திமுக கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share