முதல்வர் விஜய் டெல்லி visit..! பிரதமரை சந்திக்க திட்டம்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!
முதல்வர் விஜய் 2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.
தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, மே 10 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். அவரது கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியமைத்தது.
இது தமிழ்நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் இருமுனை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டார்.
அவரது பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். விஜயும் அவர்களுக்கு பொதுவில் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் விஜய் தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சற்று நேரத்தில் டெல்லிக்கு புறப்படுகிறார் முதல்வர் விஜய்.
இதையும் படிங்க: 1 சவரன் தங்கம் + பட்டுப்புடவை..!! தவெக அரசின் "அண்ணன் சீர்" திட்டம் விரைவில் தொடக்கம்..!!
2 நாள் பயணமாக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்படுகிறார். இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மனுவை வழங்கவுள்ளார். தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் சந்திக்க முதல்வர் விஜய் திட்டமிட்டு உள்ளார். முதல்வராக விஜய் பொறுப்பேற்று பிறகு டெல்லி செல்லும் முதல் பயணம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்..!! சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு..!!