அடுத்த பிரதமர் விஜய்.? காங்கிரசுக்கும் ராகுலுக்கும் துரோகம் இல்லையா.? என்ன CM சார்..? விளாசிய அப்பாவு.!
சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சம்பவத்தை சுட்டிக்காட்டி அப்பாவு விமர்சனம் செய்தார்.
அடுத்த முதல்வர் தமிழ்நாட்டில் இருந்து வருவார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய விவகாரத்தை சுட்டிக்காட்டி முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்த்த கலைஞரின் வரிகள் நினைவுக்கு வருவதாக கூறினார். சிந்திக்க இயலாதவன் அறிவிலி, சிந்திக்க விரும்பாதவன் சோம்பேறி, சிந்திக்க அஞ்சுபவன் கோழை, சிந்தித்து செயல்படுபவனே பகுத்தறிவாளன் என்றார்.
கடந்த ஐந்தாண்டு காலம் சிந்தித்து செயல்பட்டு, தமிழர்களின் உரிமையையும் தமிழகத்தையும் ஒன்றிய அரசின் எதிர்ப்பையும் தாண்டி பாதுகாத்து, எல்லாத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்குக் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 34 ஆண்டுகள் பெரும்பாலும் பிறமொழிப் படங்களை டப்பிங் செய்து நடிகராக இருந்தது போல், ஆட்சியிலும் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்களான காவிரி, மேகதாது, நீட், தொகுதி மறு வரையறை, FCRA உள்ளிட்ட தீர்மானங்களை டப்பிங் செய்து, தான் சிந்தித்து செயல்படுத்தியது போல் "டப்பிங் மாடல் ஆட்சி" செய்து வரும் நீங்கள் "கோழை" என்பதை தமிழ்நாடே சிரிக்கிறது CM sir என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் சிங்கம்"..! சிலர் ராஜா வேஷம் போட்டாலும் கோமாளி தான்..! அப்பாவு விமர்சனம்..!!
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் கலைஞர் போல் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு "சின்ன கலைஞர்" என்று தமிழ்நாட்டு மக்களே பாராட்டி வருவதாக தெரிவித்தார். தொகுதி மறு வரையறை தீர்மானத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, அடுத்த பிரதமர் தமிழ்நாட்டில் இருந்து தான் வருவார் என்று சொன்னதும் "விஜய்" கள்ளச் சிரிப்புடன் சட்டமன்றத்தில் அமர்ந்து ரசித்தார். அப்போது த.வெ.க உறுப்பினர்களும், காங்கிரஸ் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றது காங்கிரசுக்கும், ராகுல் காந்திக்கும் செய்யும் துரோகம் இல்லையா CM sir என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ப்ளிஸ்..!! "கோமாளி" அரசிடம் இருந்து உதயநிதியை காப்பாத்துங்க.! அப்பாவு விமர்சனம்..!!