×
 

PARTY FUND பதுக்கி பிரதமர் பிரச்சாரம்..! இதான் தூய ஆட்சியா CM சார்..? விளாசிய அப்பாவு.!

பார்ட்டி பண்ட் பதுக்கி பிரதமர் பிரச்சாரம் செய்வது தான் தூய ஆட்சியா என்று முதல்வர் விஜய்க்கு அப்பாவு கேள்வி எழுப்பினார்.

முதல்வர் விஜய் தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க முற்படுவதாக பொய்யான தகவலை தவெக தேர்தல் பிரச்சார மேடைகளில் முழக்கமிட்டு வந்த நடிகர் விஜய் தற்போது முதல்வர் விஜயாக மாறியிருப்பது மட்டுமே மாநிலத்தில் நிகழ்ந்த ஒரே மாற்றம் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது ஆட்சிக்கு வந்த முதல்வர் டாஸ்மாக், துப்புரவுப்பணி, குடிநீர் விநியோகம், அரசுப் பேருந்து ஓட்டுநர்-நடத்துநர் பணி தேர்வு ஆகியவற்றை உத்திரப்பிரதேச நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளார். தனியார் பங்களிப்புடன் மின்சார பேரூந்துகள் கொள்முதல் செய்து போக்குவரத்து துறைக்கு மூடுவிழா நடத்தி எல்லாவற்றையும் தனியாருக்கு விற்றுவிட்டார். உங்கள் திரைப்படத்தை கூவி கூவி விற்பது போல் இவற்றை விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கும் ஆட்சியாக செயல்படுவது உண்மைதானே என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அப்பாவு.

பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று சொகுசுப் பேருந்தின் மேல் ஏறி நின்று ஆடி பாடிய விஜய், தற்போது முதல்வர் ஆனதும் பாட்டிலுக்கு 20 ரூபாய் மற்றும் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு 60 ரூபாய் என்று வசூலிக்கும் பணம் உங்கள் பார்ட்டி பண்ட்டுக்கு தானே வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: புழல் சிறையில் CM விஜய் அதிரடி விசிட்..!! சிறைக் கைதிகள் நிலை என்ன.? அதிகாரிகளுடன் ஆலோசனை.!!

தனக்கு நெருக்கமாக இருக்கும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த தேர்தல் வியூக ஆலோசகர்கள், திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரிடம் முதல்வருடைய மொத்த நிர்வாகமும் விலை பேசப்பட்டு தனியார்மயமாக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வெளிமாநிலங்களில் பார்ட்டி பண்ட் பதுக்கி வைத்து ரீல் தயாரித்து பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செய்வதுதான் தூய ஆட்சியா என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதையும் படிங்க: விஜய் பிரதமராக உதவி பண்ணுவீங்களா?... சட்டென வந்து விழுந்த கேள்வி... எதிர்பாராத பதில் கொடுத்த ஜோதிமணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share