CM விஜய்க்கு பிறந்தநாள்..! பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்... அமைச்சர்கள் உற்சாகம்..!!
முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவரது தாய்மாமன் சீர் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த நற்பணி நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ப. ராஜ்குமார், ஸ்ரீநாத் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு மோதிரங்கள் அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனைகளில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
ஏற்கனவே தாய்மாமன் சீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார். இது விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை போன்ற முக்கிய மையங்களில் இந்த திட்டம் சிறப்பாக நடைபெற்றது. தனது நீண்டகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில், இந்த நிகழ்ச்சியை ஒரு மக்கள் நலன் சார்ந்த நிகழ்வாக விவரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விடிந்ததுமே விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழிசை, அண்ணாமலை... எட்டுத்திக்கில் இருந்தும் குவியும் வாழ்த்துகள்...!
அவர் குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசும்போது, "முதலமைச்சரின் பிறந்த நாளில் பிறக்கும் இந்தக் குழந்தைகள் அனைவரும் செல்வச் செழிப்புடன் வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தங்க மோதிரம் என்பது வெறும் பரிசு அல்ல, அரசின் ஆசீர்வாதமாகவும், தாய்மாமன் சீராகவும் இது வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ்குமார் இணைந்து குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தபோது, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவியது.
இதையும் படிங்க: “உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட...” - முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து...!