செஃப் தாமு மறைவு: சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பு! முதல்வர் விஜய் இரங்கல்!
செஃப் தாமுவை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என அழைக்கப்படும் கே. தாமோதரன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் செஃப் தாமு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பு என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த செஃப் தாமு, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 25ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 72. அவரது மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமையல் துறையினர், தொலைக்காட்சிப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், செஃப் தாமு தனது சமையல் திறமையால் தனி அடையாளத்தைப் பெற்றவர் என்றும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சமையல் கலையைப் பலரிடம் கொண்டு சென்றவர் என்றும் தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததையும், 2025ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: BREAKING NEWS! செஃப் தாமு காலமானார்! குக் வித் கோமாளி ரசிகர்கள் அதிர்ச்சி!
மேலும், செஃப் தாமுவை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்.
செஃப் தாமு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்று மக்களிடையே பிரபலமானார். சமையல் தொடர்பான தனது அனுபவத்தையும் திறமையையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாகப் பகிர்ந்து கொண்டார். அவரது நகைச்சுவையான பேச்சும், போட்டியாளர்களுடன் பழகிய விதமும் நிகழ்ச்சியின் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
2010ஆம் ஆண்டு 24 மணி நேரம், 30 நிமிடங்கள் மற்றும் 12 விநாடிகளில் 617 வகையான உணவுகளைத் தயாரித்து அவர் கின்னஸ் உலக சாதனை படைத்தார். சமையல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி மத்திய அரசு 2025ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவித்தது.
செஃப் தாமுவின் மறைவு சமையல் கலை உலகிலும் தொலைக்காட்சித் துறையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் கூறும் வெளிப்படைத்தன்மை எங்கே? அரசாணைகள், புதிய நியமனங்கள்? அரசு இணையதளம் குறித்து எழுந்த புகார்!