×
 

#BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் தாய் சேய் நல மருத்துவமனை, தமிழ்நாட்டின் முக்கிய மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மருத்துவமனையில் பிறப்பு தொடர்பான சிகிச்சைகள், அவசரப் பிரசவங்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு பராமரிப்பு சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

நாள்தோறும் ஏராளமான மருத்துவ சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்பாராத விதமாக இந்த மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின்போது மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் உரையாடிய முதலமைச்சர், தற்போதைய பணி நிலவரம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைத் தரம், மருத்துவ உபகரணங்களின் செயல்பாடு மற்றும் ஊழியர்களின் பணிச் சுமை ஆகியவை குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

சில இடங்களில் குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார். மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி உள்ளதா, அவசரகால சேவைகள் எவ்வளவு திறம்பட இயங்குகின்றன என்பதை ஆழமாக ஆராய்ந்தார்.

இதையும் படிங்க: தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் முதல்வர் விஜய் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் விஜயை கண்டது மருத்துவமனையில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். முதல்வரின் திடீர் வருகையால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. தமிழ்நாட்டின் பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய்யின் இத்தகைய திடீர் ஆய்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரூ.9,000 கோடி... தவெக அரசு தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... தமிழ்நாட்டிற்கு அடுத்த பேரதிர்ச்சி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share