×
 
☰

வெற்றித் தமிழகத்தைப் படைப்போம்: ஆயுதபூஜை, விஜயதசமிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

ஆயுதபூஜை,யை கொண்டாடும் அனைவருக்கும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கல்வியிலும் தொழில் வளர்ச்சியிலும் உயர்ந்து வெற்றித் தமிழகம் படைப்போம் என கூறியுள்ளார்.

புனிதமிக்க ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை உற்சாகமாகக் கொண்டாடி வரும் தமிழக மக்கள் அனைவருக்கும் முதல்வர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இத்திருநாட்கள் மக்கள் அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், நீடித்த வளத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், கல்வியிலும் தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று 'வெற்றித் தமிழகத்தை' நாம் அனைவரும் ஒன்றிணைந்து படைத்திடுவோம் என்றும் அவர் வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

உழைக்கும் கருவிகளையும், தொழில்களையும், அறிவை வளர்க்கும் புத்தகங்களையும் போற்றி வணங்கும் உன்னதமான ஆயுதபூஜை மற்றும் புதிய தொடக்கங்களுக்கும் வெற்றிக்கும் வழிகோலும் விஜயதசமி நன்னாள் தமிழகம் முழுவதும் இன்று மிகுந்த பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: மழைநீரை உடனே அகற்றுங்கள்: 15 மண்டல பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

இத்திருநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தியில்:

"ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் உழைப்பையும், தொழிலையும், அதற்குத் துணைநிற்கும் கருவிகளையும் போற்றி வணங்கும் உன்னத நாளாக ஆயுதபூஜைத் திருநாள் திகழ்கிறது. அத்துடன், அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி வீசும் கல்வியையும், கலைகளையும் வணங்கிப் புது முயற்சிகளைத் தொடங்கும் வெற்றி நாளாக விஜயதசமி விளங்குகிறது.

இத்திருநாட்கள் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், நீங்காத வளத்தையும், அமைதியையும் வாரி வழங்கட்டும். நமது உழைப்பாலும் ஒற்றுமையாலும் கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, தலைசிறந்த ஒரு வெற்றித் தமிழகத்தைப் படைத்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்" என்று முதல்வர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்துள்ளது .

 

இதையும் படிங்க: பல இடையூறுகள் இருந்தாலும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: தாராபுரம் தவெக சத்யபாமா பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share