×
 

கரூரில் CM விஜய் மாஸ் மூவ்... 31 அரசு வேலைக்கான ஆணை..! பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி..!

கரூரில் 31 பேருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கப்பட்ட நிலையில் முழு பட்டியல் வெளியாகி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்முறையாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்திற்குப் பிறகு, முதல்வராக அவர் கரூருக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது.

இந்த நிகழ்ச்சி உணர்ச்சிபூர்வமாகவும், அரசியல் முக்கியத்துவம் மிக்கதாகவும் அமைந்தது. சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சொன்னதை செய்த விஜய்..! 31 பேருக்கு அரசு வேலை..! பரபரக்கும் கரூர்..,!!

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், 2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் பணி நியமன உத்தரவுகளை முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கினார். இந்த நியமனங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டன. 

யார் யாருக்கு எந்தெந்த துறையில் வேலை என்பது குறித்த பட்டியலும் வெளியானது. 

இதையும் படிங்க: ஊரடிச்சு உலையில் போட்ட திமுக..! எத்தனை பேரு மாட்ட போறாங்களோ..! எச்சரித்த CM விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share