×
 

"CM- காக"..! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை முதல்வருக்கு வழங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிரசாதத்தை முதல்வர் விஜய்க்கு அமைச்சர் ரமேஷ் என்று வழங்கினார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா குடமுழுக்கு விழா செப்டம்பர் 17ஆம் தேதி காலை கோலாகலமாக நடைபெற்றது. 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கடைசி குடமுழுக்குக்குப் பின்னர் இந்தப் பெருவிழா நடைபெற்றது. கோயிலில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆகம விதிகளின்படி யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கின.

நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் பங்கேற்ற இந்த யாகங்களில் தமிழ் திருமுறைகளும் முழங்கின.குடமுழுக்கு நாளில் காலை 7.40 மணிக்கு தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து 7.55 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதியிலும், 8.10 மணிக்கு சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் கும்பாபிஷேகம் நிறைவுற்றது. வேத மந்திரங்களும் தமிழ் பதிகங்களும் ஒலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வீதிகளிலும் அருகிலுள்ள இடங்களிலும் குவிந்தனர். பாஸ் வைத்திருந்தோருக்கு மண்டபங்களில் இடமளிக்கப்பட்டது. பல இடங்களில் எல்.ஈ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, நேரலை ஒளிபரப்பு மூலம் தொலைதூரப் பக்தர்களும் தரிசனம் பெற்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டனர். குடமுழுக்குக்கு முன்னதாக அமைச்சர் ரமேஷ் மற்றும் பிற அமைச்சர்கள் கோயில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ வசதி, அன்னதானம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சுமார் ஆறாயிரம் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதப் பொட்டலங்களும் குடிநீரும் வழங்கப்பட்டன. ஐம்பதாயிரம் பேருக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் நில அபகரிப்பில் DMK முக்கிய புள்ளி..! ஆதாரங்கள் இருக்கு..!! அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேட்டி..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா மிக சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதத்தை முதல்வர் விஜய்க்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பிரசாதத்தை இன்று வழங்கியுள்ளார். 

இதையும் படிங்க: கோவில்களில் செல்போன்களுக்கு ரூ. 5 கட்டணம் ஏன்..? வலுக்கும் கேள்வி... அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share