×
 

முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை மாணிக்கம் தாகூர் சந்தித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஒரு முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் சந்தித்தார். இந்த சந்திப்பு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்தது.நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக மாணிக்கம் தாகூர் இருப்பதால் இந்த சந்திப்பு ஏற்பட்டது.

குழுவினர் மாநில அரசின் வீட்டுவசதி திட்டங்கள், நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வதற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தனர். முதலமைச்சருடன் நேரடி ஆலோசனை நடத்தப்பட்ட இந்த சந்திப்பில் மாநிலத்தின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள் குறித்த விரிவான விவாதங்கள் இடம்பெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வீட்டுவசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டங்கள், நகரங்களில் குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, கழிவுநீர் அகற்றல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலந்துரையாடல்  நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பார்வையில் மாநில அரசின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதை அறிந்துகொள்ளும் விதமாக இந்த ஆலோசனை அமைந்தது.மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சருடன் நடைபெற்ற முக்கியமான சந்திப்புகளில் இதுவும் ஒன்று. அரசியல் ரீதியாக இரு தரப்பினருக்கும் இடையேயான உறவுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு அதிகாரப்பூர்வமான மற்றும் அரசு சார்ந்த பணியாகவே பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் அவர் இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் முதலமைச்சர் விஜய் தனது அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைகளின் செயல்பாடுகளை விளக்கியதாகவும், குழுவின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??

மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது.நகர்ப்புற மயமாக்கல் வேகமாக நடைபெற்று வரும் தமிழ்நாட்டில் வீட்டுவசதி பிரச்சினை ஒரு முக்கியமான சவாலாகவே உள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் குடியிருப்பு பற்றாக்குறை, குடிசைப்பகுதிகளின் மறுவடிவமைப்பு, புதிய வீட்டுவசதி திட்டங்கள் ஆகியவை தொடர்ந்து கவனம் பெறுகின்றன. இத்தகைய பின்னணியில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.மாணிக்கம் தாகூர் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை வெற்றி பெற்ற அனுபவசாலியாவார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் குறித்த நிலைக்குழுவில் அவர் உறுப்பினராக இருப்பது இந்த சந்திப்புக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளித்தது. குழுவின் மற்ற உறுப்பினர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

 

இதையும் படிங்க: தவெக 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மார்க்... நெல்லையில் நின்று விஜயை விளாசித் தள்ளிய நயினார் நாகேந்திரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share