×
 

தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் விஜய் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார். அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்திலேயே தமிழ் தாய் வாழ்த்து இடம் பெற வேண்டும் என்று கோரிக்கையை முதல்வர் விஜய் முன் வைத்தார். உள்துறை அமைச்சகம் இதற்காக தெளிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளார்.

சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில் தேசிய பாடல் முதலாவதாக பாடப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர். விஜய் வலியுறுத்தியுள்ளார். இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைத்திட்டத்தை அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

கேரளா, புதுச்சேரி மாநில ஒப்புதல் என்று மேகதாது திட்டத்தினை அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார். நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகத் துணை முதல்வர் டி கே சிவகுமார் பேச்சால் விவசாயிகள் கவலை அடைந்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 58 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது கவலைக்கிடமான வகையில் அதிகரித்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக இலங்கை அரசை விடுவிக்க கோரி இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share