×
 

"இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு இன்று தமது 68வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார். சந்தால் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவராகவும், சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவராகவும், இளம் வயதில் பதவியேற்றவராகவும் வரலாற்றில் இடம்பெற்றுள்ள அவரது பயணம், ஏழ்மை, போராட்டம் மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாகத் திகழ்கிறது. 

1958 ஜூன் 20 அன்று ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா என்ற சிறிய கிராமத்தில் சந்தால் பழங்குடி குடும்பத்தில் பிறந்த திரௌபதி முர்மு, தமது இளமைப் பருவத்தை ஏழ்மை நிறைந்த சூழலில் கழித்தார். கிராமப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்த அவர், தமது கிராமத்தின் முதல் பெண்ணாக மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்று, பின்னர் புவனேஸ்வரில் உள்ள ராமாதேவி மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

ஆசிரியராகவும், அரசுப் பணியாளராகவும் தொடக்கத்தில் பணியாற்றிய அவர், அரசியலில் நுழைந்தபின் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றி, 2022 ஜூலை 25 அன்று இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

இதையும் படிங்க: ரீல்ஸ்- ஆ முக்கியம்..! CM விஜயே இதை ஏத்துக்க மாட்டாரு..! கொந்தளித்த அண்ணாமலை..!

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். நல்ல உடல் நலத்துடன் இந்திய திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை தொடர கூறியுள்ளார். 

இதையும் படிங்க: ரெடியா..? சாதித்த மாணவர்களுக்கு சிறகாகும் CM விஜய்..! விரைவில் தவெக கல்வி விருது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share