×
 
☰

முதல்வர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில் ராகுல் காந்தி...! விருந்து, ஆலோசனை..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

முதல்வர் விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு ராகுல் காந்தி வந்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வருகை தருகிறார். மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நோக்கத்துடன் அவர் இங்கு வந்துள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பு நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெறுகிறது.

ராகுல் காந்தி மதியம் சென்னை விமான நிலையத்தை அடைந்தவுடன் நேரடியாக நீலாங்கரைக்குச் செல்லவுள்ளார். அங்கு முதலமைச்சர் விஜய் அவரை வரவேற்க உள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து சென்றுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் ராகுல் காந்திக்கு விருந்தளிக்க உள்ளார். இந்த விருந்து நிகழ்வுக்குப் பிறகு இரு தலைவர்களும் அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.இந்தச் சந்திப்பு இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் தவெக தலைமையிலான கூட்டணி அமைந்த பின்னர் இது முக்கியமான சந்திப்பாக அமைகிறது. மாநில அரசியல் சூழல், கூட்டணித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் தேர்தல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விரிவாகப் பேசவுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற வாய்ப்புள்ளது.விருந்து முடிந்த பிறகு ராகுல் காந்தி சென்னை தீவுத்திடலுக்குச் செல்லவுள்ளார். அங்கு மாலை நேரத்தில் ‘மாணவர்களின் குரல்’ என்ற பெயரில் மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் அவர் மாணவர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்க உள்ளார். 

 

இதையும் படிங்க: விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share