×
 

முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

முதல்வர் விஜயின் பெயரை சாலைக்கு வைக்க கிராமசபை கூட்டத்தை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக விவாதத்திற்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி வந்தது. சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

குறிப்பாக ஏகனாபுரம் கிராமம் இந்தத் திட்டத்தால் முழுமையாக பாதிக்கப்படும் நிலையில் இருந்ததால், அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கிராமசபைக் கூட்டங்களில் பலமுறை எதிர்ப்புத் தீர்மானங்களை நிறைவேற்றியும், சில கூட்டங்களைப் புறக்கணித்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டும் தங்களது குரலை உயர்த்தினர். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த விமான நிலையப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. நில எடுப்பு உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கிராம மக்களிடையே பெரும் நிம்மதி ஏற்பட்டது.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையப் பணிகள் நிறுத்தப்பட்டதற்காகத் தமிழக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் நன்றி தெரிவித்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கிராம மக்களின் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள சாலைக்கு ‘தளபதி விஜய் சாலை’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.

இதையும் படிங்க: முக்கிய மீட்டிங்கில் உதயநிதி ஆப்சென்ட்.. முதல்வர் விஜய்யுடன் மோதல் தீவிரம்.. பரபரப்பு சம்பவம்!

இந்தத் தீர்மானங்கள் கிராம மக்களின் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தன. நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு தங்களது நிலங்களும் வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்படுவதற்கான நம்பிக்கை பிறந்திருப்பதாக மக்கள் உணர்கின்றனர். விமான நிலையத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், பணிகள் நிறுத்தப்பட்டதையே பெரும் வெற்றியாகக் கருதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

இதையும் படிங்க: நயினார் மீது CRIMINAL ACTION எடுக்கணும்..! DGP-க்கு சென்ற புகார்...! வெடிக்கும் பிரச்சனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share