×
 

“பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

காமராஜர் காலை உணவு திட்டத்தை இன்று சென்னை திருவான்மியூரில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத் தொடக்க நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.

ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவு திட்டத்திற்கு, தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்ததற்குப் பிறகு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது காமராஜர் காலை உணவு திட்டம் என்ற பெயரில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை நேர உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 44,984 பள்ளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பெற்று வந்த பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 7,537 பள்ளிகள் பயன்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

மொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 34.64 லட்சம் மாணவர்கள், அதாவது 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவர்கள், காமராஜர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.

இதில் 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களாக உள்ளனர். இவர்கள் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.

மொத்தமாக காமராஜர் காலை உணவு திட்டத்திற்காக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்த விரிவாக்கத் திட்டத்திற்காக கூடுதலாக 217 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று காலை 8.30 மணிக்கு சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்  நடைபெறும் காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக சி.எம்.விஜய் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு குறுச்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், “அன்பார்ந்த பெற்றோருக்கு வணக்கம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகைப்புரிந்து சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஏதுவாக சத்தான சுவையான காலை உணவு 22.09.2026 முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரியமுடன் ச.ஜோசப் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தீயாய் பரவும் டெங்கு காய்ச்சல்..! தீவிர நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவு.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share