×
 

ஓட்டை பாத்திரத்துல தண்ணி ஊத்துனாங்க..! ஒன்னொன்னா வரும்..! வெள்ளை அறிக்கையை சுட்டிக்காட்டி முதல்வர் விஜய் பேச்சு..!

கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முதல்வர் விஜய் கலந்து கொண்டு பேசும்போது வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையிலான அரசு பொறுப்பேற்ற சில வாரங்களுக்குள், மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் மின்சாரத் துறையின் உண்மையான நிலவரத்தை வெளிப்படுத்தும் வகையில் இரு முக்கிய வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

2026 ஜூன் 16 அன்று நிதியமைச்சர் என். மரிய வில்சன் மாநில நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையையும், ஜூன் 25 அன்று எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மின்சாரத் துறை வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டனர். இந்த அறிக்கைகள், முந்தைய ஆட்சியின் நிதி மேலாண்மை மற்றும் துறைசார் செயல்பாடுகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்யும் வகையில் அமைந்துள்ளன. அவை தமிழ்நாட்டின் பொருளாதார சவால்களை வெளிச்சமிட்டு, எதிர்கால சீர்திருத்தங்களுக்கு அடித்தளம் இடுகின்றன.

இந்த நிலையில் இன்று கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது வெள்ளை அறிக்கை தொடர்பாக பேசினார். ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் என்று திமுக ஆட்சியை விமர்சனம் செய்தார். இன்னும் நிறைய இருக்கிறது என்றும் முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பார்ட்டி ஃபண்ட்..! எடுத்தாங்க பாரு ஓட்டம்..! திமுகவை கலாய்த்த cm விஜய்..!

திமுகவின் ஆட்சியை விமர்சித்து பேசிய முதல்வர் விஜய், அமைச்சர் எ.வ வேலு குறித்தும் கரூர் கம்பெனி என்று குறிப்பிட்டு செந்தில் பாலாஜி அவர்கள் மறைமுகமாகவும் சாடினார். விவசாயிகளை உங்கள் நலனுக்காக தமிழக வெற்றி கழக அரசு கூடவே நிற்கும் என்று உறுதிப்பட தெரிவித்தார். அரசு அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சம் ஊழல் இல்லை என்று கூறினார். அப்படி யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்று கூறுங்கள் என கூறினார். 

இதையும் படிங்க: வாய்னு இருந்தா எப்படி வேணா பேசுவீங்களா..? கரூர் துயரம்..! மனவேதனையை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share