தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!
தாராபுரத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் விஜய் உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கும் நிலையில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி.ஜோசப் விஜய் இன்று தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தவெக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முதல்வரின் இந்த பிரச்சாரம் அமைந்தது. பிரச்சார மேடைக்கு வந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பிரச்சார மேடையில் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமாவை கை கொடுத்து முதல்வர் விஜய் வரவேற்றார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, அண்ணா காலம் எம்.ஜி.ஆர் காலம் போல் தற்போது நம் காலத்திலும் சாதாரண மக்கள்தான் தேர்தலின் என்று வெற்றியை பெற்று இருப்பதாக தெரிவித்தார். மக்கள் தமிழக வெற்றி கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் அதை காப்பாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.
திமுக தலைவர் ஆபாச நதியை வைத்து தரம் தாழ்ந்து பேசினாலும் மக்கள் நம் தரத்தை உயர்த்துவார்கள் என்று முதல்வர் விஜய் கூறினார். திமுக தலைவர் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று சொல்வாராம் ஆனால் அதை மதிக்க மாட்டாராம் என விமர்சித்தார். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரே ஓனர் தான் என்று குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: "அந்தக் குழந்தையே நீங்க தானே"..! ஓட்டு போடாததற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்..! கிண்டலடித்த CM விஜய்.!!
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சத்தியபாமா தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாகவும் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதை தாங்க முடியாமல் அவர் ராஜினாமா செய்தார் எனவும் குறிப்பிட்டார். திமுகவிற்கு அதிமுகவினர் முட்டுக் கொடுப்பதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். சர்க்காரியா கமிஷன் பற்றி பேசினால் திமுகவுடன் சேர்ந்து அதிமுகவும் கோபப்படுகிறார்கள் என்று விமர்சித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா போல தில்லாக திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!