×
 

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த முதல்வர் விஜய்..! ஆரத்தழுவி வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம்..!

திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் முதல்வர் விஜய்.

தமிழக சட்டசபை தேர்தலில் தனி பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். இன்று முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். இந்த நிலையில், திமுக தலைவர் மு க ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

முதலமைச்சர் ஜோசப் விஜயை வாசலில் கட்டி அணைத்து வரவேற்றார் திமுக தலைவர் ஸ்டாலின். முதலமைச்சரின் விஜயை கட்டியணைத்து கைபிடித்து அழைத்துச் சென்றார். தொடர்ந்து முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்தினார். அதன் பிறகு முதலமைச்சர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார்.

இதையும் படிங்க: தனது பெரும்பான்மையை அவர் நிரூபிப்பார்..!! முதல்வர் விஜய்க்கு உமர் அப்துல்லா வாழ்த்து..!!

தொடர்ந்து பூங்கொத்து கொடுத்தார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் முதல்வர் விஜய்க்கு நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார். ஆரத் தழுவி கைப்பிடித்து தனது இல்லத்திற்குள் அழைத்துச் சென்று மரியாதை செய்த பிறகு முதல்வர் விஜய்யும், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் கலந்துரையாடினர். அறிஞர் அண்ணா முதல்வரான போது காமராஜரை சந்தித்து வாழ்த்து பெற்றதை போல பேரறிஞர் அண்ணாவின் பாணியை முதல்வர் விஜய் பின்பற்றி உள்ளார். 

இதையும் படிங்க: "பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்"..! தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு..! பரபரக்கும் சட்டசபை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share