×
 

"அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் செய்த செயல் அனைவரையும் நெகிழச் செய்தது.

அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் தினசரி ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வருகை தருகின்றனர். பதிவு மற்றும் முன்பதிவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ‘நலம் ஏஐ’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உரையாடல் அடிப்படையில் செயல்படும் ஏஐ சாட்பாட் ஆகும். மக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே எளிய உரையாடல் மூலம் மருத்துவ முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அரசு மருத்துவ மனைக்கு உதவும் வகையில் சிறு தொகையை செலுத்தும் வகையில் நலம் டிஎன் இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தலமான ‘ நலம் TN’ இணையதளத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அனைத்து சுகாதார வசதிகளையும் பெறுவதற்கு ஏதுவாக இந்த செயலி தொடங்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இதன் தொடக்க விழா நிகழ்ச்சி மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மேடைக்கு வந்ததும் முதல்வர் விஜய் இரு கைகளால் ஹார்டின் காண்பித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முதல்வர் விஜய்யை கண்டதும் அங்கு கூட இருந்தவர்கள் உற்சாகத்துடன் முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் ஏ ஐ செயலியை தொடங்கி வைத்தவுடன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். 139 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ கட்டடங்கள் மற்றும் நவீன் உபகரணங்களை திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: இந்த ஒரு வெப்சைட் போதும்..!! Healthcare-ல் AI Entry..! Nalam TN-ஐ தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!

தொடர்ந்து 751 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட 1393 பேருக்கும் முதல்வர் விஜய் பணி ஆணைகளை வழங்கியுள்ளார். அப்போது, மாற்றுத்திறனாளி பிரிவில் தேர்வான மருத்துவருக்கு மேடையில் இருந்து இறங்கிச்சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது. முதலமைச்சர் விஜய் தனக்காக இறங்கி வந்து பணி நியமன ஆணையை வழங்குவதை கண்டதும் அந்த மாற்றுத்திறனாளி பெண் மிகவும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். 

இதையும் படிங்க: காலையிலேயே குட் நியூஸ் சொன்ன சி.எம். விஜய்... தாய்மாமன் தங்க மோதி திட்டம் குறித்து அதி முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share