"என்னம்மா இதெல்லாம்"..! திடீரென காலில் விழுந்த பெண்.. சட்டென CM விஜய் கொடுத்த ரியாக்ஷன்.!!
திடீரென முதல்வர் விஜய் காலில் பெண் ஒருவர் விழுந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு அந்தப் பகுதிகளில் வாக்காளர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தும் வகையில் அரசு பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதி ஆகியவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளான அக்டோபர் 6ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும்.காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் பள்ளிகள் அக்டோபர் 5ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், இந்த இரு தொகுதிகளில் மட்டும் சிறப்பு ஏற்பாடுகள் காரணமாக கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!
வாக்குச்சாவடிகளாக மாற்றப்படும் பல பள்ளிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அக்டோபர் 5ஆம் தேதியே கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட உள்ளன. அதனால் பள்ளி வகுப்பறைகள் தேர்தல் அலுவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மாணவர்களின் பாதுகாப்பும் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படாமல் இருக்க இந்த விடுமுறை அவசியமாகிறது.
இதையும் படிங்க: இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!