×
 

"வெற்றிப்பயணம் வரலாறு படைக்கட்டும்"..! துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்..! இளவேனிலுக்கு CM விஜய் வாழ்த்து.!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஏர் ரைபிள் துப்பாக்கி சூடு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாளறிவனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளது. குழு நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கியிருக்கிறார் இளவேனில் வாலறிவன். இந்த சாதனை இந்திய விளையாட்டு உலகிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், தமிழகத்திற்கும் சிறப்பான தருணமாக அமைந்துள்ளது.

இந்த வெற்றியைப் பாராட்டி தமிழக முதல்வர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன்-க்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மே

லும், இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது என்றும், இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: அச்சிறுப்பாக்கத்தில் CM விஜய் சூறாவளி பிரச்சாரம்..! வந்தாச்சு இடைத் தேர்தல்... எகிறும் எதிர்பார்ப்பு..!!

இளவேனில் வாலறிவன் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை. ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் தொடர்ந்து சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வரும் இவர், சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குழு நிகழ்வில் தனது அணியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது மட்டுமல்லாமல், தனிநபர் போட்டியிலும் அதே வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது அவரது திறமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது. கடுமையான பயிற்சி, ஒழுக்கம் மற்றும் போட்டி அழுத்தத்தை சமாளிக்கும் திறன் ஆகியவை இவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன.

இதையும் படிங்க: தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share