×
 

இப்படிப்பட்ட தலைவரா..? "தேசிய தலைவர் விஜய்"..! மக்கள் ஏங்குறங்க... தவெக MLA பேச்சு..!

முதல்வர் எடப்பாடி தேசிய தலைவராகுவார் என தவெக MLA கோபிசன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, கட்சியின் தலைவர் விஜய்யின் தலைமைத்துவம் பற்றிய பேச்சுகள் தமிழக எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. இந்தப் பின்னணியில், தவெகவின் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ கோபிசன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தேவையான புரட்சியாக விவரித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய கோபிசன், தமிழகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்ற மாற்றத்தை ஒரு புரட்சியாகக் குறிப்பிட்டார். இந்தப் புரட்சி இந்தியா முழுவதும் தேவைப்படுகிறது என்றும், ஒவ்வொரு மாநில மக்களும் இதுபோன்ற தலைமையை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், “இந்தியா முழுவதும் தலைவர் விஜயின் ஆட்சி தேவைப்படுகிறது” என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் தற்போது தலைவராக உள்ள விஜய் வெகு விரைவில் தேசிய அளவிலான தலைவராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.அகில இந்திய மக்கள் மத்தியில் “இப்படிப்பட்ட தலைவர் நமக்குக் கிடைக்க மாட்டாரா?” என்ற ஏக்கம் நிலவுவதாகக் கோபிசன் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நல்லாட்சி, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் ஆகியவை பிற மாநிலங்களுக்கும் உதாரணமாக அமையும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

விஜய்யின் தலைமைத்துவம் என்பது வெறும் அரசியல் மட்டுமல்ல, மக்களின் வாழ்வில் உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஒரு இயக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.இந்தப் பேச்சு தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விஜய் தலைமையில் அமைந்த ஆட்சி இன்னும் சில மாதங்களே ஆன நிலையில், மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்புகளை இந்தக் கருத்து பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. 

இதையும் படிங்க: பேரம் பேசிய விவகாரம்... உயிருக்கு ஆபத்து? தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு 24 மணி நேர போலிஸ் பாதுகாப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share