குட்டிக்கதையா..? செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!
முதல்வர் விஜய் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடைபெற்ற இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் விவாதம் நடைபெற்றது. இன்று முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஊழல், மின்வெட்டு, கோவில் நிர்வாக சீர்கேடு, என பல விவகாரங்கள் குறித்து முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார். எதிர்க்கட்சிகளை பந்தாடிய முதல்வர் விஜய் கொளத்தூர் தொகுதியை குறிப்பிட்டு பேசினார்.
ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூர் தொகுதி ஆட்டம் கண்டதாக கூறியுள்ள முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் கைசைகையை செய்து காண்பித்தார். அது மட்டுமல்லாது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று கூறி பேசி இருந்தார். அதுமட்டுமல்லாது குட்டி ஸ்டோரி ஒன்றும் கூறினார். இதனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி முதலமைச்சர் விஜய் acting performance காட்டி இருக்கிறார் என்று கூறினார். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை! முதல்வர் விஜய் கறார்! நால்வரும் அதிர்ச்சி!
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது என்றும் செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என்றும் கூறினார். ஆகவே, நடிகர் என்பதை மறந்து, இனியாவது முதலமைச்சர் என்று அறிந்து விஜய் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: தவெகவில் புகையும் உட்கட்சி பிரச்னைகள்! முட்டல், மோதல் அதிகரிப்பு! விஜய் டென்சன்!