×
 
☰

வாத்தி ரெய்டு.! தீவிரமான வடகிழக்கு பருவமழை..! செம்பரம்பாக்கம் ஏரியில் CM விஜய் அதிரடி ஆய்வு..!!

வடகிழக்கு பருவமடை தீவிரமடைந்து உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு நடத்தினார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல பகுதிகளிலும் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதையும், வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த ஏரியின் நீர்மட்டம் காலை நிலவரப்படி 14.76 அடியாகப் பதிவானது. மொத்தக் கொள்ளளவு 24 அடியாக உள்ள இந்த ஏரியில் தற்போது சுமார் 40 சதவீத அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது.

முழுக் கொள்ளளவான 3.645 டிஎம்சி-யில் தற்போது 1.488 டிஎம்சி நீர் இருப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏரிக்கு விநாடிக்கு சுமார் 150 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு சுமார் 208 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழைப்பொழிவு தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.முதலமைச்சர் விஜய் ஏரிக்கு வந்தடைந்தபோது, நீர்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவருடன் இணைந்து கொண்டனர். ஏரியின் தற்போதைய நீர் இருப்பு, வரத்து அளவு, வெளியேற்ற விவரம், மதகுகளின் நிலை ஆகியவற்றை அவர் நேரடியாகப் பார்வையிட்டார்.

அதேநேரம், வெள்ளம் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஏரிக்குள் வரும் நீரின் அளவு அதிகரித்தால் என்னென்ன படிநிலைகளில் நீர் வெளியேற்றம் செய்யப்படும், அடையாறு ஆற்றில் கலக்கும் நீரின் பாதுகாப்பான வெளியேற்றம் எவ்வாறு உறுதி செய்யப்படும் என்பன குறித்தும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமல்லாமல், மழைக்காலங்களில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கும் முக்கியப் பங்காற்றுகிறது.

இதையும் படிங்க: இலங்கை தமிழர்களை நாடு கடத்துவதா.? "இருக்கட்டுமே".! முதல்வருக்கு வேல்முருகன் முக்கிய கோரிக்கை..!!

ஏரியில் நீர்மட்டம் உயரும்போது உபரிநீரை அடையாறு ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அதனால் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வின்போது, அத்தகைய ஏற்பாடுகள் முழுமையாகத் தயாராக உள்ளனவா என்பதை முதலமைச்சர் உறுதி செய்து கொண்டார். மேலும், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய அவசரச் சூழல்களுக்கு அதிகாரிகள் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

 

இதையும் படிங்க: சேலம் முதல் செஞ்சி வரை.! பட்டப்பகலில் தொடரும் கொலைகள்..!! CM விஜயை விளாசிய ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share