×
 

ஆரம்பமே அதிரடி... உதயநிதி, இபிஎஸுக்கு விஜய் கொடுத்த வார்னிங்... சட்டப்பேரவை உரையில் இந்த பாயிண்ட்டை நோட் பண்ணிங்களா?

தனது உரையில் தனக்கு எதிராக அரசியல் செய்து வரும் திமுக, அதிமுகவிற்கு மறைமுகமாக முதலமைச்சர் வார்னிங் கொடுத்தது தான் ஹைலைட்டே.

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த அணை திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார். 

தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதல்வர் விஜய், ``மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம். கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் பரிசீலிக்கக் கூடாது. காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதல் என்றி எந்த திட்டத்தையும் கர்நாடகா மேற்கொள்ளக் கூடாது. கொள்கை நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கும். ஆனால் மக்களுக்காக கட்சிகள் ஒன்றிணையும்... மக்களுக்காக ஓரணியில் நிற்போம். விவசாயிகளுக்காக மக்களுக்காக ஒன்றாக நின்றே ஆக வேண்டும். கர்நாடகம் நீதிமன்றத் தீர்ப்பை மீறி அணை கட்ட முயற்சிக்கிறது. அதை அனுமதிக்கக் கூடாது!" என்றார்.

அதற்கு முன்னதாக தனது உரையில் தனக்கு எதிராக அரசியல் செய்து வரும் திமுக, அதிமுகவிற்கு மறைமுகமாக முதலமைச்சர் வார்னிங் கொடுத்தது தான் ஹைலைட்டே. முதலமைச்சர் விஜய் பேசியதாவது: அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி அரசியல் கட்சியினாலே அது மக்களுக்காகத்தான். அது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். கொள்கையிலே நிலைப்பாட்டில் வேணும்னா வேறுபாடு இருக்கலாம். ஆனா மக்களுக்கான பிரச்சனை என்றால் எல்லா அரசியல் கட்சிகளுமே மக்கள் பக்கம் தான் நிற்கும். நாங்களும் அப்படித்தான். மனசாட்சி உள்ள மக்களாட்சியாகவே இருக்கவே எங்கள் ஒரே விருப்பம்.  நமது விவசாயிகளுக்காகவும் நமது மக்களுக்காகவும் நின்றே ஆக வேண்டியது நம் கடமை, நம் உரிமை, எல்லாத்தையும் தாண்டி அதுதான் நம்ம உயிரான உணர்வு.

இதையும் படிங்க: அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

 நீராதாரம் தான் நம்முடைய மிக முக்கியமான அடிப்படையான வாழ்வாதாரத்தில் ஒன்று. நதிநீர் உரிமையும் நம்முடைய மிக முக்கிய உரிமைகளில் ஒன்று. அதை பாதுகாத்தே ஆக வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அந்த உணர்வோட அடிப்படையில் ஒரு தீர்மானத்தை நமது மாமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒப்புதலுக்காகவும் கொண்டுவர இருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு யாரும் யாரையும் குறை சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமாறு அனைத்து சட்டமன்ற கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறோம். 


நம்முடைய சொந்தங்களான விவசாயிகளுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் கொண்டுவரப்படும் இதீர்மானத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம். ஒருமித்த கருத்தோடு இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றி தர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொண்டு இந்த தீர்மானத்தை படிக்கிறேன். தீர்மானம் காபரி நடுவர்மன்றம் 2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும்  உச்சநீதிமன்றம் 2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும் சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவை பெறாமலும் ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியை பெறாமலும் கர்நாடக அரசு தனிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது என பேசியிருந்தார். 

அதாவது விவசாய கடன் தள்ளுபடி, மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாதது போன்ற விஷயங்களை கையில் எடுத்து தவெக அரசை திமுக, பாஜக, அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை விட மக்களுக்காக ஒன்றிணைந்து போராடுவதே முக்கியம் என முதலமைச்சர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. 
 

இதையும் படிங்க: அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share