“பெரியார் விதைத்த சமூகநீதி விதைகள்...” - லண்டனில் இருந்து வந்த மறுநொடியே சி.எம். விஜய் பரபர ட்வீட்...!
பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலும் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திராவிடர் கழகம் சார்பில் இன்று பேரணி நடத்தப்படுகிறது.
தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சாதி, மதம், வர்க்க வேறுபாடு, ஆணாதிக்கம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த பெரியார், கடந்த நூற்றாண்டாக தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகத் தொடர்ந்து விளங்கி வருகிறார்.
ஈரோட்டில் வசதியான குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ராமசாமி, சிறு வயதிலேயே வணிகத்தில் ஈடுபட்டார். பின்னர் தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வாரணாசி சென்றார். அங்கு அவர் நேரில் கண்ட மனிதாபிமானமற்ற சம்பவங்கள், அவரது சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவு சார்ந்த கருத்துகளை வலியுறுத்தத் தொடங்கினார்.
சாதி ஒழிப்பை தனது முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டு தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்த பெரியார், 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கினார்.
இதையும் படிங்க: #BREAKING ஒன் வீக் லண்டன் ட்ரிப் ஓவர்... சென்னை திரும்பினார் சி.எம்.விஜய்... ரூ.15,300 கோடி முதலீடுகளை கொத்தாய் அள்ளி கெத்து...!
பெண்களின் உரிமை மற்றும் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பிய அவர், ஆணாதிக்கத்திற்கு எதிராக பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். பெண்கள் அவருக்கு வழங்கிய சிறப்புப் பெயரே ‘பெரியார்’ என்பதாகும்.
சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது கொள்கைகளுக்கு எதிராக இருந்த சாதி, மதம், பாலினப் பாகுபாடு, மொழி ஆதிக்கம் மற்றும் மூடநம்பிக்கைகளை பெரியார் தொடர்ந்து எதிர்த்து வந்தார். கடும் எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் எழுந்த நிலையிலும் சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார்.
வயது முதிர்ந்த காலத்திலும் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பகுத்தறிவு மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சென்றார்.
இந்நிலையில், பெரியாரின் 148வது பிறந்தநாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பிலும் அமைச்சர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலும் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திராவிடர் கழகம் சார்பில் இன்று பேரணி நடத்தப்படுகிறது.
இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 17ஆம் தேதியான தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!. தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!. வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!" என பதிவிட்டுள்ளார்.
சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும்,… pic.twitter.com/jsUQk2H0ib
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 17, 2026
இதையும் படிங்க: ஒரே நாளில் 9 படுகொலை... விஜய் ஆட்சியின் லட்சணத்தை விளாசித் தள்ளிய ஆர்.பி.உதயகுமார்...!