×
 

பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?

சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாமிர சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் அன்டஸ் மலைத்தொடரில் எல் டெனிண்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான தாமிர சுரங்கம் உள்ளது. உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்களில் இதுவும் ஒன்றாகும். சிலி, உலகின் மிகப்பெரிய தாமிர ஏற்றுமதியாளராக, 19-ஆம் நூற்றாண்டு முதல் செப்பு சுரங்கங்களை பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி வருகிறது. இதனிடையே, தாமிர சுரங்கத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் தொழிலாளர்கள் 15 பேர் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் தாமிர சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்ததாகவும், 5 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியதாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் சிலியின் அரசுக்கு சொந்தமான கோடெல்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மச்சாலி கம்யூனில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், கடினமான அணுகல் பாதைகள் மற்றும் மின்சாரத் துண்டிப்பு காரணமாக மீட்பு முயற்சிகள் சவாலாக உள்ளன. 

இதையும் படிங்க: மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?

சுரங்கத்தின் உள்ளே சிக்கியவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாகவும், மீட்பு குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் அம்ராபாத் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிலியின் சுரங்கத்துறை அமைச்சர் அரோரா வில்லியம்ஸ், மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். 

இந்த விபத்து காரணமாக எல் டெனியன்டே சுரங்கத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இது உலக தாமிர விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஏனெனில் சிலி உலகின் மிகப்பெரிய தாமிர உற்பத்தியாளராக உள்ளது. விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் சுரங்க பாதுகாப்பு மற்றும் நிலநடுக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன.

 

இதையும் படிங்க: #BREAKING: ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்... பத்து நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share