வாய்ப்ப விட்றாதீங்க மாணவர்களே! மே 30ஆம் தேதி மீண்டும் அரசு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு தொடக்கம்...
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 30-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தமாக இந்தாண்டு 95.3% தேர்ச்சி பெற்றனர். இதனை அடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்றுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் மே 30 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது
இதையும் படிங்க: புரட்டி எடுக்கும் கனமழை..! அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு..!
விண்ணப்பிக்க தவறியவர்கள், துணைத் தேர்வு எழுதுபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக மீண்டும் மே 30ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜூன் 30-ம் தேதி முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்றும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குவாரிகளே வேண்டாம்! தமிழக அரசு பச்சை பொய் சொல்கிறது... சுற்றுச்சூழல் ஆணையருக்கு அன்புமணி பரபரப்பு கடிதம்!