×
 
☰

கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

கம்யூனிசத்திற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை அழிக்கவும் முடியாது என பி சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சண்முகம் விரிவான விளக்கமும் காட்டமான பதிலடியும் கொடுத்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, களம் கண்ட கட்சிகள் மற்றும் கூட்டணிகள் பெற்ற வாக்குகள் குறித்துப் பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து ஆதரவாகவும் எதிர்மறையாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் சூழலில், அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெபாசிட் பறிகொடுத்த கம்யூ., கட்சிகள்!! தவெக கூட்டணியில் இணையுமா? அக்.,12ல் ஆலோசனை!

தொடர்ந்து கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அவர், "நலன் விரும்பி முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய முறையில் பரிசீலிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் கட்சியை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், "கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று மனதளவில் விரும்புகிற எங்களது அரசியல் எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம்; கம்யூனிசத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை; யாராலும் அழிக்கவும் முடியாது" என்று திட்டவட்டமாக முழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிடுக! தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share