மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு; நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள் என்னென்ன?
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது, எப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் 3 ஆம் நாள் மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
தீர்மானம் எண் : 1:
இந்தியாவில் பாரபட்சமின்றி தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும், அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் மாநிலங்களின் எண்ணிக்கையை குறைப்பதை கடுமையாக எதிர்க்கிறோம், மேலும், மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இதில் முடிவு எடுக்க வேண்டும்
இதையும் படிங்க: கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு.. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கைது..!
தீர்மானம் எண் : 2
திருத்தப்பட்ட வக்ஃப் சட்டம் முஸ்லிம்களைத் துன்புறுத்தவே வழிவகுக்கும், நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்து குடிமக்களும் இந்த பிளவுபடுத்தும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்று ஒருமித்த குரலை எழுப்பவேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானம் எண் : 3
இந்திய தேர்தல் ஆணையம் மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து உள்ளது, 28 சதவீத மக்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கருத்துக் கணிப்பில் வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதை கடுமையாக எதிர்க்கிறோம், தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் வெளிப்படுத்தன்மையுடனும் செயல்பட வேண்டும், தேர்தல்களில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்க வேண்டும்
தீர்மானம் எண் : 4
இந்தியா அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பால் சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்ளலாம், பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை, சாதிவாரி கணக்கெடுப்பால் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்கிற தரவுகள் கிடைக்கும்
தீர்மானம் எண் : 5
காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபடும் ஈடுபடும் இஸ்ரேலுக்கு கண்டனம், பாலசீன மக்களுக்கு இந்திய மார்சிலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை தெரிவிக்கிறோம், பாலஸ்தீன மக்களுக்கு இந்திய மக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்
இதையும் படிங்க: பதவியை உதறிய கையோடு... ரஜினி ஸ்டைலில் அதிரடி முடிவெடுத்த அண்ணாமலை... கசிந்தது பரபரப்பு தகவல்...!