பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!
மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வருவதை எதிர்க்கட்சிகள் தடுப்பதாக பாஜக கூறுவது பொய்.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் குரல் எழுப்பியதாகப் புகழாரம் சூட்டினார். இந்த மசோதா மூலம் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என அஞ்சப்படும் நிலையில், ஸ்டாலினின் உறுதியான எதிர்ப்பு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்ததாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அவர் செயல்பட்டதாகவும் கார்கே வலியுறுத்தினார்.
மேலும், அமலாக்க இயக்குநரகம் (ED), மத்திய புலனாய்வு அமைப்பு (CBI), வருமான வரி துறை போன்ற அரசு நிறுவனங்களை பாஜக தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டினார். இத்தகைய அச்சுறுத்தல்களின் அடிப்படையிலேயே பிரதமர் நரேந்திர மோடியை ‘தீவிரவாதி’ என்று வர்ணித்ததாகவும், அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம்! எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவு... மல்லிகார்ஜுன கார்கே அதிரடி!
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் தடுப்பதாக பாஜக பரப்பும் கருத்து முழுமையான பொய் என்று திட்டவட்டமாக மறுத்த கார்கே, 2023-ல் நிறைவேறிய இந்த மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து கொண்டு வர முயன்றதே பாஜகவின் உண்மையான நோக்கம் என்றார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு இந்த மசோதாவை எதிர்த்ததால், பாஜகவுக்கு பெரும் பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கண்டு பாஜக அஞ்சுகிறது. அண்ணா பெயரில் கட்சியை நடத்தும் அதிமுக, எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிகிறது? ஏன் இந்த கூட்டணி?” என்று கேள்வி எழுப்பினார். பாஜக சமத்துவம், நீதி ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாத கட்சி என்றும், அதனுடன் அதிமுக இணைந்தது ஏன் என்றும் அவர் விமர்சனம் செய்தார். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்திய கார்கே, தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை எதிர்க்கட்சிகளின் வெற்றியாகக் குறிப்பிட்டார்.
மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு இல்லை என்றும், ஆனால் அதை தொகுதி மறுவரையறையுடன் இணைத்து சூழ்ச்சி செய்வதை ஏற்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார். தமிழகத்தின் முன்னேற்றத்தை மத்திய அரசு தடுப்பதாகவும், ஸ்டாலினின் கொள்கையை பாஜக அஞ்சுவதாகவும் கார்கே கூறினார். இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்ற உறுதியையும் அவர் வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!