×
 

ஒரு எம்.பிக்கே பாதுகாப்பு இல்லை.. மற்ற பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்.. எம்.பி சுதா வேதனை..!!

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் எம்.பி சுதா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி ஆர். சுதாவின் தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 6:15 மணியளவில், சாணக்கியபுரி பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விடுதி அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. திமுக எம்.பி. சல்மாவுடன் நடைபயிற்சி சென்றிருந்த சுதாவின் கழுத்தில் இருந்த 4.5 சவரன் தங்கச் செயினை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்து தப்பியோடியுள்ளார். இதில் சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த உயர் பாதுகாப்பு பகுதியில், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் மாநில அரசு இல்லங்கள் அமைந்துள்ள போதிலும், இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதா உடனடியாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியைத் தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: காங். மன்னிப்பு கேட்கணும்.. ஒரே போடாக போட்ட பாஜக..!

மேலும், சுதா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுதா, “பாதுகாப்பான பகுதியில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது ஆச்சரியமளிக்கிறது. உதவி கேட்டு கத்தியபோது யாரும் முன்வரவில்லை,” என வேதனை தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக்கூடிய தூதரங்கள் அமைந்துள்ள பகுதியில் காலை நடைபெற்ற மேற்கொண்டபோது மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் வந்து என்னிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக எந்த பதற்றமும் இல்லாமல் சென்றார். இந்த சம்பவம் நடைபெற்ற போது அந்த பகுதியில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் இல்லை என்று கூறினார். 

இவ்வளவு பாதுகாப்பான தூதரகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் இதுபோன்ற ஒரு செயின் பறிப்பு சம்பவம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நடைபெற்று இருக்கிறது என்றால், இந்த நாட்டில் பிற பெண்கள் இதுபோன்று செல்லும்போது அவர்களுக்கு எதிரான கொடுமை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் காவல்துறையினரும் அலட்சியப்போக்கு உடனே நடந்து கொண்டனர் என்பது வேதனைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம் என்றும் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை தலைநகர் டெல்லியில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் இருந்த போதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார். இந்த சம்பவம் தலைநகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
 

இதையும் படிங்க: எல்லா தப்பையும் செஞ்சது நேரு தான்..! காங்கிரசுக்கு அருகதையே இல்ல.. அமித்ஷா கொந்தளிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share