எடப்பாடி உருவப்படத்திற்கு செருப்பு மாலை... துடைப்பத்தால் அடித்து ஆவேசத்தை வெளிக்காட்டிய காங்., தொண்டர்கள்...!
எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து அவரது படத்திற்கு காலணி மாலைகள் அணிந்து, துடைப்பத்தால் அடித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு பகுதியில் பேசும்பொழுது காங்கிரஸ் கட்சி குறித்தும், மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை குறித்தும் அவதூராகவும் இழிவாகவும் பேசியுள்ளார்.
இதைக் கண்டித்து நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவத்திற்கு செருப்பு மாலை அணிந்து, துடைப்பத்தால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நேரிடமிருந்து எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை பிடுங்க முயன்றனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: இதெல்லாம் என்ன பேச்சு? இபிஎஸ் பேசியது அரசியலுக்கு உகந்ததல்ல... திருமா. தாக்கு...!
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் பொதுமக்கள் முன்பு உரையாற்றினார். அப்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை 'பிச்சைக்காரன் - ஒட்டு போட்ட சட்டை' என்று விமர்சித்திருந்தார். இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டன ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...!