“வெள்ளைக்காரனையே விரட்டுனவங்க... கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா”... திமுகவை மீண்டும் சீண்டும் காங்கிரஸ்... தெருத்தெருவாய் ‘திகு திகு’ போஸ்டர்கள்...!
மதுரை கூத்தியார் குண்டு, தோப்பூர் பகுதியில் காங்கிரஸ் தொண்டர் ஒட்டிய சுவரொட்டியால் சர்ச்சை
திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மாணிக்கம் தாகூர். விருதுநகர் மக்களவை தொகுதி பிரதிநிதியான மாணிக்கம் தாகூர், சமீபகாலமாகவே திமுகவிற்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார். காங்கிரஸ் ஆதரவு இல்லையென்றால், திமுகவால் ஆட்சியில் நீடிக்க முடியாது. எங்க ஆதரவுடன்தான் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என விமர்சித்தது. திமுக ஆட்சியில் காங்கிரஸுக்கு உரிய மரியாதை மற்றும் ஆட்சியில் பங்கு தரவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியது. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கும் வழங்க வேண்டுமென வலியுறுத்தியது என மாணிக்கம் தாகூரின் கருத்துக்களால் அரசியல் களமே அனலாய் தகிக்கிறது.
அதனை தொடர்ந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மாணிக்கம் தாக்கர் மீது புகார் கொடுக்க நேரடியாக பெங்களூரு சென்று அங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேயிடம் புகார் எல்லாம் கொடுத்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் தனது தமிழக பயணத்தின் போது கூட, கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது, பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துவிட்டு சென்றார். ஆனால் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்ற கெத்தில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியினரும் திமுகவிற்கு எதிராக கோதாவில் குதித்துள்ளனர். இதுவரை பிரவீன் காந்தி, மாணிக்கம் தாகூர் என ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேசி வந்த நிலையில், தற்போது மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் களத்தில் குதித்துள்ளனர்.
இதையும் படிங்க: இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக அதிகாரத்தில் பங்கு என வலியுறுத்தி வரும் நிலையில், மதுரை மாவட்ட செயலாளர் கோ. தளபதி மற்றும் அமைச்சர் ராஜா கண்ணப்பன் இதற்கு எதிர்வினை ஆற்றிய நிலையில் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் மதுரை காங்கிரஸ் தொண்டர் சக்கரவர்த்தி ஒட்டிய போஸ்டர் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதில் வன்மையாக கண்டிக்கிறோம்... "வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்.! இந்தக் கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா.!!" வசனங்கள் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறியா?... யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன்...!!