×
 

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு..? முதுகில் குத்தும் செயல்..! திமுக செய்தி தொடர்பாளர் அதிருப்தி..!!

தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது முதுகில் குத்தும் செயல் என திமுக செய்தி தொடர்பாளர் அதிருப்தி தெரிவித்தார்.

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எட்டாததால் கூட்டணி ஆதரவு தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக வெளியான தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை இந்த முடிவை “முதுகில் குத்தும் செயல்” என்று விமர்சித்தார். காங்கிரஸின் இந்த நடவடிக்கை INDIA கூட்டணியின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும், தேசிய அளவில் காங்கிரஸ் மீது நம்பிக்கையின்மை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

சரவணன் அண்ணாதுரை தனது விமர்சனத்தில், “இது மிகவும் குறுகிய பார்வை கொண்ட முடிவு. 2029 பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், காங்கிரஸின் இந்த முடிவு அவர்களை நிலையற்ற கூட்டாளியாக மாற்றிவிட்டது. நாடு முழுவதும் காங்கிரஸை நம்ப முடியாது என்ற பிம்பம் உருவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெகவிற்கு ஆதரவா..? முக்கிய முடிவுகள்... இன்று காங்கிரஸ் விவகாரக்குழு கூட்டம்..!

மேலும், “காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படுவதால் இதை முதுகில் குத்திய செயல் என்று அழைக்கிறோம். அவர்கள் பக்கம் தாவி தவெகவை ஆதரித்துள்ளனர். அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்காது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு என்று சொல்கிறார்கள். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: தவெகவுக்கு ஆதரவா.? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share