×
 

இ-பாஸ் ரத்து, ஏழைகளுக்கு வீடு, தாலிக்கு தங்கம்... வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி...! 

அதிமுக ஆட்சி அமைந்தால்  குன்னூர்  மார்க்கெட் வியாபாரிகள் விருப்பம் தெரிவிக்கும் இடத்திலேயே மாற்று இடம் வழங்கப்படும். 

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில்   நடைபெற உள்ள பிரச்சார நிகழ்ச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல் ஜெயலலிதாவின் மனதில் தனி இடம் உள்ள மாவட்டம் நீலகிரி மாவட்டம்.  400 கோடி செலவில் மருத்துவமனை கொடுத்த அரசு அதிமுக அரசு. நான் பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் வைத்து சென்றனர்.

தோட்ட தொழிலாளர் அதிகம் உள்ள மாவட்டத்தில் அத்யாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.அதனை கண்டுக் கொள்ளாத அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சி அமைந்தால்  சுற்றுலாவை நம்பியுள்ள மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும்.

திமுக ஆட்சியில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தால் அதை கட்டுபடுத்துவோம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 30,000, திமுக ஆட்சியில் 70, 000 கட்டி அனுமதி பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: கனிமொழி அவர்களே...!! திமுகவை ஒரு காலத்துல காப்பாத்துனதே அதிமுக தான் தெரியுமா? - எடப்பாடி அதிரடி பதிலடி...!

அதிமுக ஆட்சி அமைந்தால்  குன்னூர்  மார்க்கெட் வியாபாரிகள் விருப்பம் தெரிவிக்கும் இடத்திலேயே மாற்று இடம் வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பாட்டில் 10 ரூபாய் கூடுதல் வசூல் செய்து வருகின்றனர்.4 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. டாஸ்மாக் ஊழல் அதிமுக ஆட்சி அமைந்தால் தவறு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு  தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டம், நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டும் அந்த திட்டம் கொண்டு வரப்படும்.  தீபாவளி வந்தால் தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும். வீடில்லாத ஏழை மக்களுக்கு நிலத்தை வாங்கி புதிய வீடு கட்டப்படும் என்றார். 

இதையும் படிங்க: மீண்டும் NDA கூட்டணியில் தினகரன்? அண்ணாமலை - TTV திடீர் சந்திப்பு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share