அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! போலீஸ் தேடுவது தெரிந்தும் மோட்டார் அறையில்... கோவை பாலியல் வழக்கில் வெளிவரும் உண்மைகள்!
கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், போலீஸ் தேடுதலை அறிந்ததும் குற்றவாளிகள் மீண்டும் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் போலீசார் தேடுவதை அறிந்த பின்னரும் அந்த மாணவியை மோட்டார் அறைக்குள் அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த மாதம் 2-ஆம் தேதி, கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி காதலனுடன் காரில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சதீஷ், கார்த்திக், தவசி ஆகிய மூன்று பேர் காதலனைத் தாக்கி, மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் மூன்று குற்றவாளிகளையும் போலீசார் கால்களில் சுட்டுப் பிடித்தனர்.
இந்த வழக்கில், 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தரப்படும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, போலீசார் 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும், 400 ஆவணங்களையும் கோவை மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: கோவை மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் - ஆட்டு வியாபாரியை கொன்றதாக குற்றவாளிகள் வாக்குமூலம்!
காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், சம்பவம் நடந்த அன்று இரவு 11:10 மணிக்கு மாணவியைக் கடத்திச் சென்று, அரசு பாலிடெக்னிக் வளாகச் சுற்றுச்சுவரைத் தாண்டச் செய்து, அங்குள்ள மோட்டார் அறைக்குள் அடைத்து வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இரவு 11:30 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை, சுமார் 4.5 மணி நேரம் மாணவியை அடைத்து வைத்துள்ளனர். மாணவியைக் கடத்திய பின்னர், வெளியே வந்த மூன்று பேரும், விமான நிலையத்தின் பின்புறத்தில் போலீஸ் வாகனங்கள் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதைக் கண்டனர்.
தங்களைத் தான் போலீசார் தேடுகின்றனர் என்பதை மூன்று பேரும் அறிந்த பின்னரும், அந்த மாணவியை மீண்டும் மீண்டும் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவி வேண்டாம் என்று கதறியபோதும், அதைப் பொருள்படுத்தாமல், அரிவாளைக் காட்டி மிரட்டி இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கைரேகைகள், மோட்டார் அறையில் எடுக்கப்பட்ட தடயங்கள் உட்படப் பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாணவியிடமிருந்து பறித்துச் சென்ற வெள்ளி மோதிரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவை சிறையில் உள்ள சதீஷ், கார்த்திக், தவசி ஆகிய மூன்று குற்றவாளிகளும் நேற்று காணொளி காட்சி மூலம் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி சிந்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றப்பத்திரிக்கையில் வெளிவந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: துடிக்க துடிக்க மனைவி கொலை.. சடலத்துடன் WhatsApp Status வைத்த கணவன்..!! கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன..??