×
 

பிரபல வங்கி மேலாளருக்கு பிடிவாரண்ட்... நீதிமன்றம் அதிரடி ஆணை!!

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பிரபல வங்கி மேலாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஐஓபி வங்கி மேலாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

தென்காசி மாவட்டம் கீழநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவர் அப்பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார். 

அதனை முறையாக தவணை முறையில் வங்கியில் செலுத்தி வந்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் கடைசித் தவணையாக ரூ. 3000 செலுத்திய போது அவரது வங்கி கணக்கு ரூ.640 மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: BJP-க்கு பக்கா ஜால்ரா அதிமுக...கூஜா தூக்க ரெடி ஆகிட்டாங்க...திமுக கடும் விமர்சனம்!

மீதமுள்ள ரூ.2360 குறித்த தகவலை கேட்டதற்கு முறையாக வங்கி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. 

இதைத்தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை குறைபாட்டுடன் ஈடுபட்டதாக கூறி தங்கபாண்டியன் தரப்பில் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அதை விசாரித்த நீதிபதிகள் உரிய விளக்கத்தை பதிவு செய்ய வங்கி தரப்பிடம் உத்தரவிட்டனர். கொரோனா தடுப்பு களத்தில் வங்கி கடன் பரிவர்த்தனை செலுத்த ஆர்பிஐ விதித்த கடன் மறு திட்டமிடுதல் தொகையாக கடன் பெற்றவர்களிடமிருந்து ரூ.2360 இப்படித்தான் செய்யப்பட்டதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களும் கடன் பெற்றவருக்கு கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

 

ஆனால் வங்கியில் கடன் பெற்ற தங்கபாண்டியன் என்பவருக்கு இது குறித்து அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படாதவை ஆதாரப்பூர்வமாக நிரூபித்த நிலையில் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த மே மாதம் 2024 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பாதிக்கப்பட்ட தங்க பாண்டியனுக்கு வழக்குச் செலவுக்கான தொகையுடன் சேர்த்து ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. 

ஆனால் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கீழ நீலிதநல்லூர் மேலாளர் மீது செயலாற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

அதை வழக்கில் வங்கியின் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற ஆணைய தலைவர் பிலான்ஸ்டோன் பிளஸ் தாகூர் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு அக்டோபர் மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

 

......

இதையும் படிங்க: மழலை குரலில் பாடி அசத்திய பார்வையற்ற குழந்தைகள்.. உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய திரௌபதி முர்மு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share