கோவையில் இளம் பெண் கடத்தலில் நடந்தது என்ன?... காவல் துறை ஆணையர் விளக்கம்...!
கோவையில் இளம் பெண் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் கொடுத்து காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று இரவு இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த பெண் ஒருவரை வெள்ளை நிற காரில் வந்த நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றி சென்றதை அங்கு இருந்தவர்கள் பார்த்து உள்ளனர். அந்த பெண் அப்போது தன்னை காப்பாற்றும் படி அவறியதாகவும், அந்த சத்தத்தைக் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பெண் கடத்தப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? யார் அந்த இளம் ? அந்தக் கார் எங்கு சென்றது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் கடத்தப்பட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இருகூர் விவகாரத்தில் வெள்ளை கலர் காரில் பெண் ஒருவர் சத்தம் போட்டு சென்றதாக அங்கிருந்து ஒரு பெண்மணி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100க்கு தகவல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் மீண்டும் பகீர் சம்பவம்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. சீறிப்பாய்ந்த கார்.. இளம்பெண் கடத்தலா?
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளோம்சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதி வரை வந்துள்ளார்கள். அங்குள்ள உள்ள ஒரு பேக்கரியில் சிசிடிவி காட்சிகளை காப்பற்றி உள்ளோம். அதில் வாகன எண் தெளிவாக இல்லை.
அந்த சிசிடிவி காட்சியில் பெண் உள்ளே இருந்ததற்கு எந்த ஒரு பதிவும் தெளிவாக இல்லை. இது சம்பந்தமாக தற்பொழுது வரை புகார் வரவில்லை. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வாகன எண் தற்பொழுது வரை தெளிவாக கிடைக்கவில்லை.
வாகன எண் தெளிவாகத் தெரிந்ததும் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும். தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆபத்தான அசுர வேகம்... மரத்தில் மோதி சுக்குநூறான கார்... உடல் நசுங்கி 4 இளைஞர்கள் பலி...!