காலையிலேயே அதிரடி... கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளுக்குள் புகுந்த காவல்துறை... காரணம் என்ன?
அன்னூர் அருகே கோவில் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் ,அத்திப்பாளையம்,வையாபுரி நகர்,பகுதிகளில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது
கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகிறாராகளா! விடுதிகளில் போதைப் பொருட்கள் ஏதாவது வைக்கப்பட்டுள்ளதா! என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் அதிகாலை முதல் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பிட்ட இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தனியாக வீடு எடுத்து தங்கி வரும் நிலையில் மாணவர்கள் விடுதியில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் மீண்டும் அதிர்ச்சி... கஞ்சா கும்பலைக் காட்டிக் கொடுத்த இளைஞர் கொலை? - பகீர் பின்னணி...!
மாணவர்கள் போதை பொருட்கள் பயண்படுத்துவதை தடுக்கும் விதமாக விடுதிகளில் போதை பொருட்கள் பயன்படுத்துவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க இந்த சோதனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
கோவில் பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் இன்று அதிகாலை 4மணி முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காவல் துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் அறைகளுக்கு புதிதாக யாராவது வருகிறார்களா? வெளி ஆட்களுடன் மாணவர்கள் தொடர்பில் உள்ளன என்பது குறித்தும் ஒவ்வொரு மாணவரிடமும் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அமுதன், ஆகஸ்ட் 10ஆம் தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து அமுதனை தாக்கியதாக அவரது பெற்றோர்கள் குற்றச்சாட்டினர். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டமன்றம் வரை கொண்டு சென்ற நிலையில், தமிழக அரசு தரப்பில் இதை மறுத்து, இரு மாணவர் குழுக்களுக்கு இடையிலான முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலே கொலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக ஆராய இந்த ஆய்வு நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கோவை மாணவனுக்கு நடந்தது என்ன?... முதல் தகவல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்..!