×
 
3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ  ஆர்ப்பாட்டம்!

கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடக மாநில வனப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற அப்பாவித் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் ஈவுஇரக்கமின்றிச் சுட்டுப் படுகொலை செய்த கொடூரத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தென்சென்னை மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், கர்நாடக வனத்துறையின் மனிதநேயமற்ற அடாவடிப் போக்கிற்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டார்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு. வீரபாண்டியன், எல்லையோரப் பகுதியில் கால்நடை மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஏழை எளிய விவசாயிகளை மான் வேட்டையாட வந்தவர்கள் என்று முன்னறிவிப்பின்றிப் பொய்க் குற்றம் சுமத்தி வனத்துறை சுட்டுக் கொன்றிருப்பதை வன்மையாகச் சாடினார். இது மன்னிக்க முடியாத கொடூர வனத்துறை பயங்கரவாதம் எனக் குறிப்பிட்ட அவர், குற்றவாளிகளைக் காப்பாற்ற கர்நாடக அரசு முனையக் கூடாது என்றும், வெளிப்படையான நீதி விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகளைக் கொலை வழக்கில் உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

இதையும் படிங்க: அனாமத்தாய் போன தமிழர்கள் உயிர்..! நீதி கேட்டால் ஆணவப் பேச்சு..! கர்நாடக முதல்வரை பந்தாடிய வேல்முருகன்.!!

காவிரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய வீரபாண்டியன், மேகதாதுவில் அணை கட்டும் உரிமை கர்நாடகாவிற்குத் துளியும் கிடையாது என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். கர்நாடகாவின் உள்விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என அம்மாநில முதல்வர் கூறுவது குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், காவிரி நதிநீர் பங்கீடு என்பது தமிழகத்தின் உயிர் உரிமை என்றும், சட்டத்தின் ஆட்சியை மதித்து நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீரைத் தர வேண்டிய பொறுப்பைத் திசைதிருப்பக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.  

இதையும் படிங்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share