×
 

மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை அமைக்கப்படுவதை சிபிஐ கட்சி எதிர்த்துள்ளது.

தமிழக அரசு சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இது தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள இடநெருக்கடியை சமாளிக்கவும், நவீன வசதிகளுடன் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கவும் எடுக்கப்பட்ட முடிவாகும். முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த இந்த திட்டம் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது.

இதற்காக பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 முதல் 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலம் பெரும்பாலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 மாடிகள் கொண்ட முதன்மை கட்டிடத்துடன் இந்த வளாகம் வடிவமைக்கப்படும் என்றும், இதற்காக கட்டிடக்கலை ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் குழுக்கள் உள்ளிட்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே எதிர்க்கட்சிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு தவறானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையும் படிங்க: கருக்கலைப்புக்கு எதிராக பேசுவதா..? சபாநாயகர் கருத்துக்கு சிபிஐ வீரபாண்டியன் எதிர்ப்பு..!

மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோர சூழலியல், பொதுமக்களின் கடற்கரை அணுவல் ஆகியவை பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, சமூக ரீதியாக பொருத்தமான மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share