விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!
தமிழக வெற்றி கழகத்தின் தோழமை கட்சி கூட்டத்திற்கு சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகத்திற்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை (ஜூலை 1) மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு சிபிஎம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர் தவெக அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ், சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. சில கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.
மதிமுகவும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் தோழமை கட்சிகளுடன் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், எதிர்கால அரசியல் திட்டங்களை வகுக்கவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: DMK + ADMK + BJP..! கொள்கை புடலங்காய்... CPM விமர்சனம்..!!
முன்னதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோரை அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து நாளைய கூட்டத்திற்கான அழைப்பைத் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் தவெகவுடன் இணைந்த அல்லது ஆதரவு அளித்த கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!